நீ கற்ற கல்வி தந்ததா நீ?
நீ செய்யும் வேலை தந்ததா நீ?
நீ கொண்ட செல்வம் தந்ததா நீ?
நீ கொண்ட சொந்தம் தந்ததா நீ?
நீ வணங்கும் கடவுள் தந்ததா நீ?
உன் தாய் தந்தை தந்ததா நீ?
நீ பார்த்த உலகம் தந்ததா நீ?
நீ கொண்ட சிந்தை தந்ததா நீ?
பிரம்மாண்டமான காலக்கடலில்
பிறந்து கரையும் காலத்துளிகளில்
பிறந்து கரையும் காலத்துளிகளில்
உரக்க வாழ்ந்துவிடும்
ஒரு நுண் வாழ்க்கையே நீ!
Nice.. Welcome and all the best :)
ReplyDelete