Saturday, June 19, 2021

முரண்சூழ் கர்மா

முதலில் எளிய கேள்விகள்

"நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும்" னு நம்புனா எவ்ளோ நல்லா இருக்கு. "ஒருத்தன் அநியாயம் செஞ்சா அவனுக்கு கெட்டது கண்டிப்பா கிடைக்கும்" னு நம்புனா எவ்ளோ நல்ல இருக்கு. ஊழ்வினை அல்லது கர்மா  போல ஒரு மனஆறுதல் தர கருத்து வேற எதுவும் இருக்க முடியாது.

அப்போ ஒரு நல்லவனுக்கு கெட்டது நடக்கும் போது என்ன தோணும்?
"யார் செஞ்ச பாவமோ இப்போ இவன தாக்குது. ஒன்னு அவன் அப்பா அம்மா செஞ்ச பாவமா இருக்கும். இல்லனா அவனே போன ஜென்மத்துல செஞ்ச பாவமா இருக்கும். அதான் இப்போ அனுபவிக்கிறான்.  எல்லாம் கர்மா" னு தோணும். கர்மாவ இன்னொரு ஜென்மம் வரைக்கும் கொண்டு போக வேண்டி இருக்கு. பல ஜென்மங்களுக்கு வேல செய்றதுதுதானே கர்மாங்குற கருத்தே. சரி, அப்டினா முதன் முதல்ல தோன்றிய மனிதர்கள் யாருக்குமே முன் ஜென்மம் இல்ல தானே. அப்போ கர்மாவும் இருக்க முடியாதுதானே. அப்போ அதுல ஒருத்தர் எந்த கெட்டதும் பண்ணாம இருக்கும்போது அவங்களுக்கு கெட்டது நடந்தா, அத எப்படி கர்மாவ வச்சி புரிஞ்சிக்கிறது?

இன்னும் சில தகவல்கள் தெளிவா புரிஞ்சா கர்மா ல இருக்க முரண்கள் அபத்தங்கள் தெரியுது.
1. பூமில மனிதர்களோட எண்ணிக்கை கடந்த 200 வருடங்கள்ல மட்டும் (தொழிற்புரட்சி, தடுப்பூசிகள் வந்த பிறகு) 100 கோடிக்கு கீழ இருந்து 700 கோடியா மாறி இருக்கு. மனித வரலாற்றுல ஆயிரக்கணக்கான வருடங்களா எப்பவுமே 100 கோடிக்கு மேல மனிதர்கள் இருந்ததில்லை. இந்த வரைபடத்துல இந்த தகவல் இருக்கு. மக்கள்தொகை பத்தின எந்த அதிகாரபூர்வ மூலத்துலயும் இந்த தகவல் கிடைக்கும்.

அப்டினா 600 கோடி அதிக மனிதர்கள் இந்த கடைசி 200 வருஷத்துல வந்திருக்கோம். இந்த தகவலையும் கர்மாங்குற கருத்தையும் சேத்து யோசிச்சு பாத்தா திடீர்னு ஒரு 600 கோடி புதிய மனித ஆன்மாக்கள் உண்டானதா? புதுசுனா அப்போ அந்த ஆன்மாக்களுக்கு முன் ஜென்மத்து கர்மா ஒன்னும் இருக்க முடியாதுதானே. அப்போ அதுல ஒருத்தர் எந்த கெட்டதும் பண்ணாம இருக்கும்போது அவங்களுக்கு கெட்டது நடந்தா, அத எப்படி கர்மாவ வச்சி புரிஞ்சிக்கிறது?

இன்னும் பெருசா யோசிச்சா முன் ஜென்மத்துல இந்த 600 கோடி பேரும் மனுஷனா தான் இருந்திருக்கணும் அப்டிங்குற அவசியம் இல்ல. வேற மிருகமா இருந்து பாவம் செஞ்சி அதனால கர்மா உண்டாகி அப்புறம் மனுஷனா பொறக்கும்போது அதனால பாதிக்கப்படலாம் னு தோணலாம். இந்த கருத்துல நெறய முரண்கள் இருக்கு. மொதல்ல மனுஷன தவிர எந்த உயிரினமும் உயிர் வாழவும் சந்ததியை பரப்பவும் தான் எல்லா காரியத்தையும் செய்யுது. அதுல போயி ஒரு புலி இன்னொரு உயிரை கொன்னு சாப்டா பாவம் னு சொல்ல முடியாது. புலியோட அமைப்பே அதான். அந்த உயிரினம் அப்டி உண்டானது யார் குற்றம்? அப்புறம்  தாவரங்கள் உயிர் இல்லையா? அத கொன்னு சாப்டா பாவம் இல்லையா? மானாவோ மாடவோ பொறந்தா பாவகணக்கே ஏறாதா?  
எல்லாத்துக்கும் மேல ஏற்கனவே இருந்த உயிரினங்களோட அடுத்த பிறவிதான் இந்த 600 கோடி புதிய மனிதர்கள் அப்டினு வச்சிக்கிட்டா பூமில உயிர்களின் எண்ணிக்கை எப்பவுமே மாறாத ஒரு எண்ணா? இத இன்னொரு தகவல இணைச்சி யோசிப்போம். பூமில இது வரைக்கும் 5 பேரழிவுகள் நடந்து இருக்கு. இனவழிப்பு நிகழ்வு னு பேரு. எரிகற்கள், பருவநிலை மாற்றம், பெரும் எரிமலை வெடிப்பு இப்டி பல காரணங்கள். இந்த லிங்க் ல பாக்கலாம் அத பத்தி. இந்த ஒவ்வொரு நிகழ்வுலயும், பல ஆயிரம் உயிர்வகைகளே பூமில இருந்து காணாம போயிருக்கு. அப்போ உயிர்களோட எண்ணிக்கை ஒரு மாறிலி னு சொல்ல முடியுமா? என்ன ஒரு அபத்தமான கருத்து கர்மாங்குறது.

சரி ஒரு அறம் சார்ந்த கேள்வி. ஊட்டச்சத்து குறைப்பாடோட இருக்கோம்னு கூட தெரிஞ்சிக்க முடியாத, கஞ்சிக்கே வழி இல்லாத, ஒரு ஏழை ஆப்பிரிக்க நாட்ல பொறந்த, படிப்பையோ ஒரு சாதாரண வாழ்க்கையையோ கூட நெனச்சே பாக்க முடியாத, தோலெல்லாம்  எலும்போட ஒட்டிப்போன, அப்பா அம்மாவையும் உள்நாட்டு போர்ல இழந்த, யாருமே உதவிக்கு வராத, ஒரு 2 வயசு கொழந்தயோட நெலமையா யோசிங்க. இது ஒன்னும் இப்போ நடக்காத விஷயம் இல்ல. அந்த குழந்தைக்கு உதவி செய்யறதுக்கான முயற்சி எடுக்க முடியாத நெலைமைல நாம இருக்கோம்னு வைங்க. ஐயோ நாம ஒன்னும் பண்ண முடியலையே னு வருத்தமும், கோபமும், ஆற்றாமையும், குற்ற உணர்ச்சியும் வரது நியாயமா? இல்ல "அந்த குழந்தையோட முன் ஜென்ம கர்மாவால அது அனுபவிக்குது, அனுபவிக்கட்டும்" னு நெனச்சி மன ஆறுதல் அடையுறது நியாயமா?

கர்மாவால என்ன நல்லது?

இந்து மதம் மட்டும் அல்ல புத்த மதத்திலும் கர்மா மிகவும் ஆணித்தரமாகவே இருக்கு. ஏன்? கடவுளை பற்றி கருத்து கூறாத புத்தரும் கர்மா உண்டுனு  சொன்னது ஏன்?
கர்மாவால வர ஒரு உருப்படி நல்லது இது தான். மக்கள் அறத்தோட வாழனும் னா அடுத்த பிறவியை பற்றிய பயத்த உண்டு பண்ணனும். இந்த காரணம்தான் கர்மாவ இந்த மதங்கள் அடிப்படை உண்மையா வச்சிருக்க காரணமா? இல்ல கர்மாவுக்கு வேற அர்த்தங்கள் இருக்கா?
தண்டனை பயத்தால ஒருத்தர் அறத்தோட வாழுறாருனா அப்போ உண்மையிலேயே அவர் நல்லவர் இல்லையே. தண்டனைக்கு பயந்தவர் அவ்ளோதானே? சுயமா யோசிச்சு நல்லது பண்ணாதானே நல்லவர்.

சரி வெகுஜனத்துக்கு இதெல்லாம் புரிஞ்சி சுயமா நல்லவங்களா இருக்க முடியாது. கர்மாதான் சரி பயம்தான் சரி னு அப்டியே விடலாமா? இல்ல இது பொய்தான்னு உதிர்த்திடலாமா? வெகுஜனம் இத புரிஞ்சிக்கிற அளவுக்கு வர முடியலன்னு இதுக்கு சமமா உண்மையை, அறிவியலை அடிப்படையா வெச்சமாதிரி வேற மாற்று கருத்துக்களை தேடலாமா? அப்படி வர கருத்துக்கு கர்மா அளவுக்கான மக்கள கட்டிப்போடுற சக்தி இருக்குமா?

 

No comments:

Post a Comment