Friday, April 29, 2016

அண்டவெளியை அகலமாக்கிய ஹப்பிள் 1


1920 க்கு முன் பேரண்டம் முழுவதும் ஒரே ஒரு நட்சத்திர கூட்டம் தான் இருப்பதாக அறிவியல் உலகம் நினைத்து வந்தது. அதுதான் நம் பால்வழித்திரள். நாம் காணும் அனைத்து நட்சத்திரங்களும், நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனும்,  இந்த கூட்டத்தில்தான் உள்ளன. ஆனால் 1920 களில் இந்த ‘ஒரே ஒரு நட்சத்திர கூட்டம்’ என்ற அறிவில் ஒரு பிரம்மாண்ட மாற்றம் வந்தது. அப்போது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி ஒன்று அமெரிக்காவில் இருந்தது. அதை வைத்து வானை ஆராய்ச்சி செய்ய வந்தவர்தான் எட்வின் ஹப்பிள். அவர் ஒளிமாறும் நட்சத்திரங்கள்’ என்ற ஒரு வகை நட்சத்திரங்களை தொடந்து பல இரவுகள் ஆராய்ந்தார். அதில் ஒன்று நம் பால் வழித்திரளில் உள்ள எல்லா நட்சத்திரங்களை விட பல மடங்கு தொலைவில் இருப்பதை கண்டறிந்தார். அதன் பிறகு அந்த நட்சத்திரம் இருப்பது முற்றிலும் வேறொரு நட்சத்திர கூட்டத்தில் என்று கண்டு சொன்னார். விரைவிலேயே இதே போன்று மேலும் பல நட்சத்திர கூட்டங்கள் இருப்பது தெரிந்தது. பல என்றால் பத்தோ நூறோ அல்ல. சில நூறு கோடிகள்!  பேரண்டம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரம்மாண்டம் கொண்டது என்ற புரிதல் தொடங்கியது ஹப்பிளிற்கு பிறகுதான். அவர் பெயரை கொண்ட ஹப்பிள் தொலைநோக்கி இப்போது நம் பூமியை சுற்றிகொண்டே நம் அறிவை மேலும் அகலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஹப்ளுக்கு நன்றி.. கருத்தை பகிர்ந்த உங்களுக்கும்

    ReplyDelete
  3. ஹப்ளுக்கு நன்றி.. கருத்தை பகிர்ந்த உங்களுக்கும்

    ReplyDelete