Wednesday, September 2, 2015

செயற்கை இலை



சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைட், இந்த மூன்றும்தான் இயற்கையில் இலைகள் உணவுதயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள். இந்த இடுபொருட்களை  கச்சிதமாக பயன்படுத்துவதில் இயற்கை ஒரு ஆசான்.
.
இயற்கையில் உணவு தயாரிக்க இலைகள் செய்யும் இந்த வேலையை போல, ஆய்வகத்தில் எரிபொருள் தயாரிக்க இதே போன்ற முறையை பயன்படுத்தும் முயற்சிகள் கொஞ்ச காலமாக நடைபெற்று வருகின்றன. இவை செயற்கை இலை தொழில்நுட்பம் என்ற வகையில் சேரும்.
.
ஒரு ஐந்து வருடங்களாக முயற்சி செய்து கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், இப்படி ஒரு ப்ராஜக்டை செய்துள்ளனர். இதன் மூலம் சூரிய ஒளி மற்றும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைட் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரை (H2O) பிரித்து ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கச்சிதமாக மாற்றியுள்ளனர்.

இதனால் என்ன லாபம்? இதில் வரும் ஹைட்ரஜன் ஒரு மிகச்சிறந்த எரிபொருள். எதிர்காலத்தில் இன்னும் அதிமாகப் போகும் எரிபொருள் பற்றாக்குறைக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுவது ஹைட்ரஜன்.
.
இது போன்ற ஒரு ப்ராஜெக்ட் வெற்றி பெற, அமெரிக்க அரசு மிக அதிக நிதியை இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்து, இதற்காக ‘செயற்கை ஒளிச்சேர்க்கை மையம்’ ஒன்றையும் தொடங்கி இருப்பதுதான் காரணம்.
.
இது போன்ற ஆராய்ச்சிகள்  மக்கள்தொகையில் விரைவில் உலகின் முதலிடத்தை தொட இருக்கும் நம் இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு மிக அவசியம். செய்வதற்கான திறமை நம்மிடம் இருப்பதற்கு மங்கள்யானே சாட்சி.  இப்படிபட்ட ப்ராஜக்ட்களுக்கான தொலைநோக்கு திட்டங்கள் கொண்டுவரப்படுவதுதான் தேவை.

No comments:

Post a Comment