Saturday, August 29, 2015

உலகச் சவால் 1




உலகின் மிக முக்கியமான எதிர்கால சவால்களில் ஒன்று ‘ஆற்றல்’. அதாவது எரிபொருள், மின்சாரம் ஆகியன. எரிபொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன என்பது தெரிந்த விஷயமே. மின்சாரம் தயாரிக்கப்படும்போதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படத்தான் செய்கிறது.
.
மின்சாரத்தை தயாரிக்க நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாக வெளியேறுகிறது. இது புவி வெப்பமாதலுக்கு காரணமாகும் ஒரு முக்கியமான பச்சைவீடு வாயு (Green House Gas). இந்த அனல் மின் நிலையங்களை விட, அணுமின் நிலையங்களில் கார்பன் டை ஆக்ஸைடு கழிவுகள் மிக மிக குறைவுதான். ஆனால் இந்த அணுமின் நிலையங்களில் ‘அணுக்கரு பிளவு’ (Nuclear Fission) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ப்ளுடோனியம் போன்ற பெரிய நிறை கொண்ட அணுக்கருக்கள் பிளக்கப்படுகின்றன. இதிலிருந்துதான், கதிரியக்க கழிவுகள் வருகின்றன. இவற்றை மிக கவனமாக கையாள வேண்டி உள்ளது. புகுஷிமா சம்பவம் போன்ற ஆபத்துக்களும் இதில் உண்டு.
.
இந்த பிரச்சினைகளுக்கு உருப்படியான தீர்வுகளில் ஒன்றுதான்  ‘அணுக்கரு இணைவு’ (Nuclear Fusion). இதில் மிக லேசான ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைக்கப்படுகின்றன. இதில் நல்ல விஷயம் என்ன என்றால் கதிரியக்க கழிவுகள் வராது. ஆற்றலும் அதிகமாக கிடைக்கும். 
.
ஆனால் சவால் இதுதான். இந்த முறையின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் உள்ளது. சில நொடிகளுக்கு மேல் தொடர்ச்சியாக மின்சாரம் வரும்படி செய்ய முடியவில்லை. ஆனாலும் உலக அளவில் தீவிரமாக ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.  வெற்றி இன்னும் கிட்டவில்லை. இந்தியாவும் இதில் பங்கெடுத்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்கான நிதியில் துண்டு விழாமல் பார்த்துக்கொள்வது பொதுமக்களான நம் கடமை. நம் அரசின் கடமை.

No comments:

Post a Comment