நாம் பார்க்கும் வாழை பழங்கள் விதை இல்லாமல்
உள்ளன. ஆனால் காட்டில் இயற்கையாக வளரும் பெரும்பாலான வகை வாழைப் பழங்கள் அதிகமான
விதைகளுடன் இருக்கும். மனிதர்கள் இப்படிப்பட்ட பழங்களை சிரமப்பட்டு சாப்பிட
வேண்டும்.
விவசாயத்திற்கு முந்திய காலத்தில் வேறு வழி இல்லை. ஆனால் அப்போது மிக அரிதான
சிலவகை வாழைப்பழங்கள் மட்டும் விதை இல்லாமல் இருந்தன. பிற்காலத்தில் விவசாயம்
செய்ய ஆரம்பித்ததும் மனிதர்கள் அந்த அரிய வகை வாழைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வளர்த்து
விவசாயம் செய்து சாப்பிட்டு வந்தனர். அதனால் அந்த வகை வாழைகளுக்கு இன்று வரை
அழிவில்லை.
மனிதர்கள் இப்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டதால் இந்த வகை வாழைகளை மட்டுமே பார்க்க முடிகிறது. விதை அதிகமான மற்ற இனங்கள் பல அழிந்து விட்டன. சில காடுகளில் மட்டும் சில அரிய வகை காட்டு வாழைகள் தப்பித்துள்ளன.
மனிதர்களுக்கு பயன் தருகின்ற காரணத்தால்தான் நம்மை சுற்றி உள்ள கிட்டத்தட்ட எல்லா தாவரங்களும் (உணவு, உடை, இருப்பிடம், மருந்து, எரிபொருள் தருபவை), விலங்குகளும் (மாமிசம், பால், உடை, பாதுகாப்பு, நட்பு தருபவை) நம்மிடையே உள்ளன. அவற்றின் மற்ற வகைகள் மனிதர்களுக்கு பயன் தராதததால் அழிக்கப்பட்டு விட்டன அல்லது காட்டில் மட்டும் இருக்கும் அரிய இனங்களாக சுருங்கிவிட்டன. இதற்கு பெயர்தான் ‘செயற்கை தேர்வு’. இதை மனிதர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக மட்டுமே செய்கின்றனர்.
சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மட்டுமே செய்யப்பட்டாலும் ‘செயற்கை தேர்வு’ என்பது உலகையே மாற்றி விட்டது என்பது புரிகிறது. ஆனால் பல நூறு மில்லியன் வருடங்களாக ‘இயற்கை தேர்வு’ என்ற ஒன்று நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதாவது இயற்கை உயிர்களை தேர்ந்தேடுத்துக்கொண்டே வந்திருக்கிறது. கவனிக்க வேண்டியது இந்த கால அளவுதான். பல நூறு மில்லியன் ஆண்டுகள். கிரகிக்க கடினமான இருக்கும் அளவிற்கு ஆழமான கால அளவு இது.
இந்த இயற்கை தேர்வால் என்ன நடந்திருக்கும்? மிக மிக பெரிய விளைவு ஒன்று நடந்திருக்கிறது. உலகில் இருக்கும் அத்தனை உயிர் வகைகளும், அவற்றுக்கிடைப்பட்ட ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் இந்த இயற்கை தேர்வின் விளைவுதான். இயற்கையில் ஒத்துபோக முடியாத, சமாளிக்க முடியாத உயிரினங்கள் அழிந்துவிடும்.
கவனிக்கவும் மிக வல்லமையாக இருக்க வேண்டியதில்லை. இயற்கை வீசும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒத்துப்போகும் அல்லது சமாளிக்கும் அளவு இருக்க வேண்டும். இப்படி இல்லாததால் உலகில் இது வரை வாழ்ந்த இனங்களில் 99.9% அழிந்து விட்டன. உதாரணமாக டைனோசார்கள் பலசாலிகள். அதனால்தான் பல சூழ்நிலைகளை சமாளித்தன. ஆனால் உத்தேசமாக இயற்கை வீசிய எரிகல் நெருப்பு நிபந்தனையில் தோற்றுப்போயின. அதே நிபந்தனையை குட்டி அளவிருந்த உயிரிகள் சமாளித்துவிட்டன. அதாவது Survival of the fittest என்பதை விட survival of the most adaptable என்பதுதான் இயற்கை தேர்வின் சரியான புரிதல். புரிந்துகொண்டு உலகை பார்த்தால் உயிர்களின் மகத்துவம் சொல்லும் புரிதல்.
விவசாயத்திற்கு முந்திய காலத்தில் வேறு வழி இல்லை. ஆனால் அப்போது மிக அரிதான
சிலவகை வாழைப்பழங்கள் மட்டும் விதை இல்லாமல் இருந்தன. பிற்காலத்தில் விவசாயம்
செய்ய ஆரம்பித்ததும் மனிதர்கள் அந்த அரிய வகை வாழைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வளர்த்து
விவசாயம் செய்து சாப்பிட்டு வந்தனர். அதனால் அந்த வகை வாழைகளுக்கு இன்று வரை
அழிவில்லை. மனிதர்கள் இப்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டதால் இந்த வகை வாழைகளை மட்டுமே பார்க்க முடிகிறது. விதை அதிகமான மற்ற இனங்கள் பல அழிந்து விட்டன. சில காடுகளில் மட்டும் சில அரிய வகை காட்டு வாழைகள் தப்பித்துள்ளன.
மனிதர்களுக்கு பயன் தருகின்ற காரணத்தால்தான் நம்மை சுற்றி உள்ள கிட்டத்தட்ட எல்லா தாவரங்களும் (உணவு, உடை, இருப்பிடம், மருந்து, எரிபொருள் தருபவை), விலங்குகளும் (மாமிசம், பால், உடை, பாதுகாப்பு, நட்பு தருபவை) நம்மிடையே உள்ளன. அவற்றின் மற்ற வகைகள் மனிதர்களுக்கு பயன் தராதததால் அழிக்கப்பட்டு விட்டன அல்லது காட்டில் மட்டும் இருக்கும் அரிய இனங்களாக சுருங்கிவிட்டன. இதற்கு பெயர்தான் ‘செயற்கை தேர்வு’. இதை மனிதர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக மட்டுமே செய்கின்றனர்.
சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மட்டுமே செய்யப்பட்டாலும் ‘செயற்கை தேர்வு’ என்பது உலகையே மாற்றி விட்டது என்பது புரிகிறது. ஆனால் பல நூறு மில்லியன் வருடங்களாக ‘இயற்கை தேர்வு’ என்ற ஒன்று நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதாவது இயற்கை உயிர்களை தேர்ந்தேடுத்துக்கொண்டே வந்திருக்கிறது. கவனிக்க வேண்டியது இந்த கால அளவுதான். பல நூறு மில்லியன் ஆண்டுகள். கிரகிக்க கடினமான இருக்கும் அளவிற்கு ஆழமான கால அளவு இது.
இந்த இயற்கை தேர்வால் என்ன நடந்திருக்கும்? மிக மிக பெரிய விளைவு ஒன்று நடந்திருக்கிறது. உலகில் இருக்கும் அத்தனை உயிர் வகைகளும், அவற்றுக்கிடைப்பட்ட ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் இந்த இயற்கை தேர்வின் விளைவுதான். இயற்கையில் ஒத்துபோக முடியாத, சமாளிக்க முடியாத உயிரினங்கள் அழிந்துவிடும்.
கவனிக்கவும் மிக வல்லமையாக இருக்க வேண்டியதில்லை. இயற்கை வீசும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒத்துப்போகும் அல்லது சமாளிக்கும் அளவு இருக்க வேண்டும். இப்படி இல்லாததால் உலகில் இது வரை வாழ்ந்த இனங்களில் 99.9% அழிந்து விட்டன. உதாரணமாக டைனோசார்கள் பலசாலிகள். அதனால்தான் பல சூழ்நிலைகளை சமாளித்தன. ஆனால் உத்தேசமாக இயற்கை வீசிய எரிகல் நெருப்பு நிபந்தனையில் தோற்றுப்போயின. அதே நிபந்தனையை குட்டி அளவிருந்த உயிரிகள் சமாளித்துவிட்டன. அதாவது Survival of the fittest என்பதை விட survival of the most adaptable என்பதுதான் இயற்கை தேர்வின் சரியான புரிதல். புரிந்துகொண்டு உலகை பார்த்தால் உயிர்களின் மகத்துவம் சொல்லும் புரிதல்.
No comments:
Post a Comment